யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில் இன்றையதினம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்வில் மாநகர சபை உறுப்பினர் வ.பார்தீபனை நோக்கி "நாய்" என விளித்து பேசியதாக மற்றுமொரு மாநகர சபை உறுப்பினர் ஜெ.ரஜீவ்காந்தை ஒரு மாத காலத்திற்கு சபை அமர்வில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தடை சட்டத்திற்கு முரனானது என குறிப்பிட்டு வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில் மாநகர சபை உறுப்பினர் ஜெ.ரஜீவ்காந்தால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment