‘நீதி இல்லாத நாட்டில் சூரியன் உதிக்காது’ – பாரதவின் மனைவி சாபம்! - Yarl Voice ‘நீதி இல்லாத நாட்டில் சூரியன் உதிக்காது’ – பாரதவின் மனைவி சாபம்! - Yarl Voice

‘நீதி இல்லாத நாட்டில் சூரியன் உதிக்காது’ – பாரதவின் மனைவி சாபம்!



” கொலையாளியை விடுதலை செய்து, நீதியை சிறை வைத்துள்ளனர். நீதி இல்லாத நாட்டில் சூரியன் உதிக்காது.”

– இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திரவின் மனைவி தெரிவித்துள்ளார்.

பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திரவின் மனைவி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

” மேல்நீதிமன்ற நீதிபதிகள் மூவரும், உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஐவரும் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத நாடு.  ஒரு நாடு பல சட்டங்கள் உள்ளன என்பது விடுதலைமூலம் உறுதியாகியுள்ளது.” எனவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post