இலங்கைக்கான பாகிஸ்தான் நாட்டுத் தூதுவர் மொகமட் சாட் கட்டாக் இன்று புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதனை பாகிஸ்தான் தூதுவர் மொகமட் சாட் கட்டாக் சந்தித்து கலந்துரையாடினர்.
சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன்....
தற்போதைய கொரோனா காலகட்டத்தில் விவசாயம் கல்வி கடற்றொழில் போன்ற விடயங்களை எவ்வாறு மேற்கொள்வது என்றும் அதில் உள்ள சவால்கள் தொடர்பிலும் பாகிஸ்தான் தூதருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
குறித்த சந்திப்புகளில் இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார வர்த்தக ரீதியாக எவ்வாறு உறவுகளை வலுப்படுத்தலாம் என்பது தொடர்பிலும் பாகிஸ்தானில் கல்விகற்க விரும்பும் மாணவர்களுக்கு இலவசமாக புலமைப்பரிசில் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது என்றார்.
இலங்கை மக்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு எப்போதும் தொடரும் எனவும் இரண்டாவது தடவையாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்ததும் மகிழ்ச்சி என பாகிஸ்தான் நாட்டுத் தூதுவர் மொகமட் சாட் கட்டாக் தெரிவித்தார்.
இலங்கைக்கான பாகிஸ்தானிய தூதுவரின் வருகையையொட்டி யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது
Post a Comment