கிரிக்கெட் போட்டியில் இணைத்துக் கொண்ட வேகத்திலேயே இளம் வீரரை வெளியேற்றிய ECB ! இங்கிலாந்து அரசியல் மட்டத்தில் அதிர்வலைகள் ! - Yarl Voice கிரிக்கெட் போட்டியில் இணைத்துக் கொண்ட வேகத்திலேயே இளம் வீரரை வெளியேற்றிய ECB ! இங்கிலாந்து அரசியல் மட்டத்தில் அதிர்வலைகள் ! - Yarl Voice

கிரிக்கெட் போட்டியில் இணைத்துக் கொண்ட வேகத்திலேயே இளம் வீரரை வெளியேற்றிய ECB ! இங்கிலாந்து அரசியல் மட்டத்தில் அதிர்வலைகள் !




இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது போட்டியில் புதிதாக இணைக்கப்பட்ட பந்து வீச்சாளர் ஓலி  றொபின்சன் எதிர்கால போட்டிகளிலிருந்து காலவைரையின்றி இடைநிறுத்தப்பட்டுளார். 

 அவர் 19 வாயதாக இருந்தபொழுது ட்விட்டரில் பதிவிட்ட இனத்துவேசமான மற்றும்  பெண்களை இழிவு படுத்ததும் விதமான கருத்துக்கள் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அவர்மீதான விசாரணைகள் நிலுவையில் உள்ளதால் 27 வயதான றொபின்சன்  எச்பாஸ்டனில் வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுளார். 

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட இங்கிலாந்து கலாசார அமைச்சர் ஒலிவர் டௌண்டேன், றொபின்சனுடைய் பதிவுகள் தவறானவை ஆனால் அவை பத்து வருடத்திற்கு முன் விடலை பருவத்தில் எழுதியவை. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இது தொடர்பாக மீண்டும் சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார். 

மேலும் கலாச்சார  அமைச்சர் ஒலிவர் தெரிவித்த இந்த கருத்தை பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஆதரிப்பதாகவும். இந்த சம்பவத்திற்கு ஒலி றொபின்சன் சரியான விதத்தில் மன்னிப்பு கோரியுள்ளதாகவும் அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post