UNDP நிறுவனத்தினரால் அத்தியாவசிய சுகாதார பாதுகாப்புப் பொருட்கள் யாழ் அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் ஆகியோரின் வழிகாட்டலிற்கு அமைவாக சர்வதேச மற்றும் தேசியரீதியான அரசசார்பற்ற அமைப்புக்கள் ஊடாக
நாட்டினுள் வேகமாக பரவும் கொவிட் -19 தொற்றுநோய் சூழலிற்கு மத்தியில் பணியாற்றும் கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிற்கு அத்தியாவசிய சுகாதார பாதுகாப்புப் பொருட்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
அந்த வகையில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களிடம் UNDP அரச சார்பற்ற நிறுவனத்தினரால் இன்றைய தினம்(29) அத்தியாவசிய சுகாதார பாதுகாப்புப் பொருட்களான 50,000 One day Face mask, 5000 Face Mask KN 95, 2000 Face shield, 200 Ppe kit ஆகியன வழங்கி வைக்கப்பட்டன.
இவ் சுகாதார பாதுகாப்பு பொருட்கள் கொவிட் - 19 பேரிடரில் சேவையாற்றும் பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிற்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment