கோபா அமெரிக்கா இறுதி போட்டியில் பிரேசிலை 1:0 வீழ்த்தி ஆர்ஜென்ரீனா சம்பியன் - Yarl Voice கோபா அமெரிக்கா இறுதி போட்டியில் பிரேசிலை 1:0 வீழ்த்தி ஆர்ஜென்ரீனா சம்பியன் - Yarl Voice

கோபா அமெரிக்கா இறுதி போட்டியில் பிரேசிலை 1:0 வீழ்த்தி ஆர்ஜென்ரீனா சம்பியன்




நடப்புச் சம்பியன் பிரேசில் அணியை சொந்தமண்ணில் வீழ்த்தி கோபா கிண்ணத்தை முத்தமிட்டது மெஸ்சி தலைமையிலான ஆர்ஜென்ரீனா அணி.

இந்த வெற்றியின் மூலம் கோபா கிண்ணத்தை அதிக முறைவென்ற அணி என்ற சாதனையை உருகுவேயுடன்  பகிர்நது கொண்டது.

இரு அணிகளும் 15 தடவை கோபா கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கோபா கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இன்று காலை 5.30 மணிக்கு பிரேசில் - ஆர்ஜென்ரீனா அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

போட்டி ஆரம்பமாகி 22 ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்ரீனா வீரர் டி மரியா கோல் அடித்தார். அதன் பின்னர் ஆட்டம் விறுவிறுப்பானது.

இறுதிவரை பிரேசில் கோல்போடுவதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்ட போதும் ஆர்ஜென்ரீனாவின் பின்கள வீரர்கள் அவற்றை முறியடித்தனர்.

இறுதியில் ஆர்ஜென்ரீனா 1-0 என பிரேசிலை வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

ஆர்ஜென்ரீனா அணி இதுவரை 28 முறை கோபா கிண்ண இறுதியில் விளையாடி 14 முறை கிண்ணத்தை வென்றுள்ளது.இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கோபா கிண்ணத்தை அதிக முறை  வென்ற உருகுவேயின் சாதனையை 15 முறை கிண்ணம் வென்ற  சமன் செய்தது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post