இந்தியாவில் மும்பையில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் பல வீடுகள் இடிந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் மழை வீழ்ச்சி எதிர்வு கூறப்பட்டுள்ளதால் அவ்விடத்தில் இருந்து மக்களை கட்டாயமாக வெளியேறுமாறு அதிகாரிகள் நிர்பந்திக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மீட்பு பணியாளர்கள் உபகரணங்களின்றி கைகளால் மண்ணை வாரி இறைத்து புதையுண்ட மக்களை தேடி வருகின்றனர் என சாட்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் முபையின் பல பகுதிகள் கடும் மழையாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வர்த்தக தலைநகரமான மும்பையில் வரும் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பொழியும் எனவும் காலநிலை மையம் அறிவித்துள்ளது.
ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக நிலையான வசிப்பிடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுப்போம் என மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணிநேரத்தில் வீடுகள் மற்றும் மதில் உடைந்த 11 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
Post a Comment