அயர்லாந்தில் கிளப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கடைசி ஓவரில் தொடர்ந்து ஆறு சிக்சர்கள் விளாசி துடுப்பாட்டத்தில்; சாதனைப் படைத்துள்ளார்.
வடக்கு அயர்லாந்து கிளப் அணிகளுக்கு இடையில் எல்.வி.எஸ். டி-20 தொடர் நடைபெற்றது.
இதன் இறுதிப் போட்டியில் கிரேகாக்- பாலிமேனா அணிகள் மோதின.
கிரேகாக் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், கிரேகாக் முதலில் துடப்பாட்டத்தில்; 40 ஓவர் போட்டியில் 147 ஓட்டங்கள் அடித்தது.
பின்னர் பாலிமேனா அணி பதிலுக்கு துடுப்பாட்டம் செய்தது. கிரேகாக் அணியின் துல்லியமான பந்து வீச்சால் பாலிமேனா அணியால் 39 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்களே அடிக்க முடிந்தது.
இதனால் கடைசி ஓவரில் 35 ஓட்டங்கள்; தேவைப்பட்டது. கடைசி ஓவரை பாலிமேனா அணியின் கப்டன் எதிர்கொண்டார்.
கடைசி ஓவரில் 35 ஓட்டங்கள் அடிப்பது கடினம். அதனால் சம்பியன் கிண்ணம் நமக்குதான் என கிரேகாக் அணியின் வீரர்களும், இரசிகர்களும் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் பாலிமேனா கப்டன் ஜான் கிளாஸ் கடைசி ஓவரின் ஆறு பந்துகளையும் சிக்சருக்கு அடித்து அணியை வெற்றி பெறவைத்தார்.
கடைசி ஓவரில் 36 ஓட்டங்கள்; விளாசி 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல், ஜான் கிளாஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். அத்துடன் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார்.
Post a Comment