வீட்டுக்கு வீடு தென்னை மரம் "கப்ருக" 40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களினால் கரவெட்டியில் வழங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 500 தென்னங்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.
நிகழ்வில் உரையாற்றிய அங்கஜன் இராமநாதன் அவர்கள்,
“யாழ் மாவட்டமானது பனைசார் உற்பத்திக்கு இணையாக தென்னைசார் உற்பத்தியிலும் சிறந்து விளங்கும் ஒரு மாவட்டமாகும்.
எமது மண்ணின் தென்னைளூடாக வேறு பிரதேசத்தவர்கள் வருமானத்தை பெறுவதைக்காட்டிலும் எமது மக்களே தென்னையிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு விடயத்தையும் வணிகமயப்படுத்தி அதனூடாக வருமானத்தை பெற முயற்சிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், தெங்கு பயிர்ச்செய்கை அதிகாரசபை பிராந்திய முகாமையாளர், பிரதி பிராந்திய முகாமையாளர், யாழ்.மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மேலும், இலங்கையின் இரண்டாவது தென்னை முக்கோண வலயமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
Post a Comment