பொது இடங்களில் நடமாடும் போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளதாகவும், அவ்வாறு தனிமைப்படுத்தல் விதிகளை மீறி நடமாடுவோரை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இன்று முதல் மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்வதற்கு இன்று முதல் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முகக்கவசமின்றி பொதுவெளியில் நடமாடுவது தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் குற்றமாகும்.
அந்த குற்றங்கள் நிரூபிக்கப்படும் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதமும், 6 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
எனவே முகக்கவசம் அணியாது சன நெரிசல் மற்றும் பொதுவெளியில் நடமாடுபவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment