யாழ்ப்பாணத்தில் 60 வயது மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோப்பாய் MOH பிரிவில் நீர்வேலி தெற்கு, நீர்வேலி மேற்கு கிராம சேவையாளர் பிரிவினருக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் இடம்பெறுகின்றது.
பெரும்பாலான தாதியர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடுவதால் ஒரு சிலரே பணியில் உள்ளனர். இதனால் இராணுவத்தினரின் மருத்துவ பிரிவினர் தடுப்பூசி ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை நீர்வேலி வடக்கு கிராம சேவையாளர் பிரிவனருக்கான தடுப்பூசி ஏற்றப்படும். அனைவரும் குடும்ப அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டையுடன் சென்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவும்.
Post a Comment