700 கிராம் கை குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை -இந்திய மருத்துவர்கள் சாதனை- - Yarl Voice 700 கிராம் கை குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை -இந்திய மருத்துவர்கள் சாதனை- - Yarl Voice

700 கிராம் கை குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை -இந்திய மருத்துவர்கள் சாதனை-



பிறந்து 27 நாட்களேயான, 700 கிராம் பெண் குழந்தை ஒன்றுக்கு அகமதாபாத்தில் வெற்றிகரமாக இருதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.

இந்த அளவுக்குக் குறைவான எடை உள்ள ஒரு குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவைசிகிச்சை நடத்தப்பட்டிருப்பது இதுதான் குஜராத்திலேயே முதன்முறையாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இது ஆபத்துக்கள் நிறைந்த ஒரு அறுவை சிகிச்சையாக இருந்தது. குறை மாதத்தில் பிறந்த எடை குறைவான குழந்தை இது. 

சிம்ஸ் மருத்துவமனையிலோ மாநிலத்தின் வேறு எந்த மருத்துவமனையிலோ இப்படிப்பட்ட ஒரு அறுவை சிகிச்சை இதுவரை செய்யப்படவில்லை. 

குழந்தை இறக்க நேரிடலாம் என்பதுதான் பெரிய ஆபத்தாக இருந்தது. சிறுநீரகங்களின் நிலையை சொல்லும் கிரியேட்டினின் அளவும் மோசமாக இருந்தது. எனவே, சிறுநீரகம் செயலிழக்கும் ஆபத்தும் இருந்தது. என்று கூறுகிறார் இதில் ஈடுபட்ட குழந்தைகளுக்கான இருதய சிகிச்சை வல்லுநர் மருத்துவர் திவ்யேஷ் சதாதிவாலா.

மூலம் :- bbc tamil

0/Post a Comment/Comments

Previous Post Next Post