யாழில் கொரோனாவால் மேலும் இருவர் மரணம் - Yarl Voice யாழில் கொரோனாவால் மேலும் இருவர் மரணம் - Yarl Voice

யாழில் கொரோனாவால் மேலும் இருவர் மரணம்




யாழில்  இன்று மேலும் இருவர் கொரோனாவால் மரணமடைந்தனர்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவர்  இன்று உயிரிழந்துள்ளார்.

இதேவேளை பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று அதிகாலை  வீட்டில் மரணமடைந்துள்ளார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனைகளில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரது குடும்பத்தில் மூவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்றுக்காலை இறுதிச் சடங்குக்குச் சென்றவர்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post