நடிகை நயன்தாரா தனது அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார் நயன்தாரா
கடந்த 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தார் நயன்தாரா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்தப் படத்தின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இருவரும் காதலிக்கும் விஷயம் ஊரறிந்த விஷயமானது. இருவருக்கும் ரகசிய திருமணம் முடிந்துவிட்டதாகவும் கடந்த சில ஆண்டுகளாக தகவல் பரவி வருகிறது
ஆனால் அதுகுறித்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இதுவரை வாய் திறக்கவில்லை. அதேநேரத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் தகவல் வெளியானது. இருவரும் அவ்வப்போது வெளி நாடுகளுக்கு ஒன்றாக சுற்றுலா செல்லும் போட்டோக்களும் வைரலாவது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லாத இருவரும் கடந்த ஆண்டு லாக்டவுனுக்கு பிறகு சற்று ரிலாக்ஸேஷன் அறிவிக்கப்பட்டதும் தனி விமானத்தில் கோவா சென்றனர். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
அண்மையில் இருவரும் தனி விமானத்தில் மீண்டும் கேரளா சென்றனர். இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திடீரென கேரளா சென்றதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது நயன்தாராவின் அப்பாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மகளின் திருமணத்தை பார்க்க ஆசைப்படுகிறாராம் அவரது தந்தை. இதனை தொடர்ந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்ட திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் வெளியாட்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதில் மணக்கோலத்தில் இருந்த நயன்தாரா, திருமண கோலத்தில் தன்னை பார்க்க வேண்டும் என்ற தனது அப்பாவின் ஆசையை நிறைவேற்றி உள்ளதாகவும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
நயன்தாரா தற்போது ரஜினியுடன் அண்ணாத்த, விக்னேஷ் சிவன் இயக்கிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் நெற்றிக்கண் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்து விட்டார். இதில் நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.
இந்நிலையில் மேலும் சில புதிய படங்களில் நடிக்க நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நேரத்தில் திருமணம் செய்து கொண்டால் அது தனது மார்க்கெட்டை பாதிக்கும் என்பதால் நடிகை நயன்தாரா திருமணத்தை ரகசியமாக வைத்துக் கொள்ள விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
Post a Comment