இதயங்களை வென்று விட்டாய் சகோதரா- தீபக் சாகர் சகோதரி நெகிழ்ச்சி - Yarl Voice இதயங்களை வென்று விட்டாய் சகோதரா- தீபக் சாகர் சகோதரி நெகிழ்ச்சி - Yarl Voice

இதயங்களை வென்று விட்டாய் சகோதரா- தீபக் சாகர் சகோதரி நெகிழ்ச்சி



இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தீபக் சாகர் ஹீரோவாக எழுச்சி பெற்றார்,பவுலிங்கில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, பேட்டிங்கில் 82 பந்துகளில் 69 ரன்கள் விளாசி அருமையாக வெற்றிகரமாக பினிஷ் செய்தார்.

ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இந்தியாவுக்காக ஆல்ரவுண்டராக ஆட வேண்டும் என்று அவர் முன்பு வெளிப்படுத்திய ஆசையும் நிறைவேறியது. சூரியகுமார் யாதவ் 44 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ரன் ரேட்டை தக்கவைத்ததே பிற்பாடு புவனேஷ்வர் குமார், தீபக் சாகர் ஹீரோயிஸத்துக்கு வித்திட்டது.

இந்நிலையில் தீபக் சாகரின் சகோதரி மால்தி சாகர், வின்னிங் ஷாட் அடிக்கும் தீபக் சாகரின் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்ததோடு ஒவ்வொரு இந்தியர்களின் இதயத்தையும் வென்று விட்டாய் சகோதரா, நீ ஒரு நட்சத்திரம் தொடர்ந்து பிரகாசி என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post