வடக்கு கிழக்கிற்கு விசேட கொவிட் தடுப்பூசி திட்டம்: அமைச்சர் நாமல் - Yarl Voice வடக்கு கிழக்கிற்கு விசேட கொவிட் தடுப்பூசி திட்டம்: அமைச்சர் நாமல் - Yarl Voice

வடக்கு கிழக்கிற்கு விசேட கொவிட் தடுப்பூசி திட்டம்: அமைச்சர் நாமல்




வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு - கிழக்கு மாகாண மக்களுக்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை விரைவுபடுத்துவது தொடர்பில் கௌரவ அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள், அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி இவ்விசேட திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட  அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post