சிறிதரனை ஏற்றிச் சென்ற படகோட்டியிடம் இராணுவ புலனாய்வாளர்கள் விசாரணை - Yarl Voice சிறிதரனை ஏற்றிச் சென்ற படகோட்டியிடம் இராணுவ புலனாய்வாளர்கள் விசாரணை - Yarl Voice

சிறிதரனை ஏற்றிச் சென்ற படகோட்டியிடம் இராணுவ புலனாய்வாளர்கள் விசாரணை




கிளிநொச்சி கௌதாரிமுனையில் கடல் அட்டைப் பண்ணையை பார்வையிடச் சென்ற யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் செய்தியாளர்களை ஏற்றிச் சென்ற படகு உரிமையாளரை புலனாய்வாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கௌதாரிமுனையில் மூன்று மாதங்களாக சீன நாட்டவரால் நடாத்தப்படும் கடல் அட்டைப் பண்ணை தொடர்பில் உள்ளூர் மீனவர்களின் குற்றச் சாட்டுத் தொடர்பில் தேரில் ஆராய்வதற்காக யாழில் இருந்து ஓர் படகு மூலம் நேற்று முன்தினம் கௌதாரிமுனைக்கு காலை 8 மணியளவில் பயணித்து 10.30 மணியளவில் கரை திரும்பியிருந்தனர்.

இதன்போது நாடாளும்மன்ற உறுப்பினருடன் அவரின் உதவியளர்களும் சில செய்தியாளர்களும் பயணித்திருந்தனர்.

 இவ்வாறு சென்று வந்த விடயம் செய்தியாக வெளிவந்த நிலையில் பெலனாய்வாளர்கள் சிலர் சென்று படகில் ஏற்றிச் சென்ற மீனவர் சங்கம் ஊடாக படகோட்டியிடம் வினாவியுள்ளனர்.

காலையில் சென்று வந்தமையை மாலையே கண்டுபிடிக்கும் புலனாய்வாளர்களால் 3 மாதமாக இயங்கும் சீன நாட்டவரின் பண்ணையை மட்டும் கண்டு பிடிக்க முடியவில்லை என மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post