யாழ்ப்பாண மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டம் அழகுபடுத்தும் செயற்திட்டம் ஆரம்பிப்பு - Yarl Voice யாழ்ப்பாண மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டம் அழகுபடுத்தும் செயற்திட்டம் ஆரம்பிப்பு - Yarl Voice

யாழ்ப்பாண மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டம் அழகுபடுத்தும் செயற்திட்டம் ஆரம்பிப்பு



யாழ்.நகர் மணிக்கூட்டுக்கோபுர சுற்று வட்டத்தின் அழகுபடுத்தல் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகர தூய்மைப்படுத்தல் மற்றும் அழகுபடுத்தல் செயற்றிட்டத்தின் கீழ் யாழ்.நகர் பகுதியில் காணப்படுகின்ற அனைத்து சுற்றுவட்டாரங்களும் விரைவில் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் முயற்சியினால் தனியார் நிறுவனங்களின் நிதிப்பங்களிப்பில்; மீளமைக்கப்பட்டு அழகுபடுத்தப்படவுள்ளது.

அதன் முதற்கட்டாமாக யாழ்.நகர் பகுதியில் நீண்டு நிமிர்ந்து மிடுக்கோடு காட்சியளிக்கும் யாழ்ப்பாணத்தின் தனித்துவமான அதன் அடையாளங்களில் ஒன்றாக பார்;க்கப்படும் மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டத்தையும் அதனைச் சூழந்த பகுதியியையும் அழுகுபடுத்துகின்ற செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மணிக்கூட்டுக் கோபுரத்தில் உள்ள மணிக்கூடானது கடந்த சில மாதங்களாக இயங்கவில்லை என்பது அனைவராலும் சுட்டிக்காட்டப்பட்டது.

 உண்மை தான் குறித்த மணிக்கூட்டுக் கோபுரத்தின் நான்கு பக்கங்களிலும் உள்ள மணிகூடுகளையும் ஒரே சமயத்தில் இயங்குநிலையில் வைத்திருக்கின்ற சாதனம் சயல் இழந்து விட்டது. உடனடியாவே குறித்த சாதனம் கழட்டப்பட்டு கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 

அதன் பின்னர் கொரோனா தொற்றுக் காரணமாக மேல் மாகாண முடக்கம் மற்றும் நாடு முழுவதற்குமான பயணத்தடை ஆகிய காரணமாக குறித்த சாதனத்தை திருத்துவது மற்றும் திரும்ப பெறுவது தாமதமாகியது. அதற்பொழுது அது திருத்தப்பட்டு கொழும்பில் உள்ளது.

 இன்னம் ஒரு சில நாட்களில் யாழ்.மாநகர சபை அதனை பெற்றுக்கொள்ளும். அதன் பின்னர் மணிக்கூடுகள் இயங்கு நிலைக்குத் திரும்பும்.

குறித்த மணிக்கூடு மற்றும் அதில் எழுப்பப்படும் ஒலி போன்ற விடயங்களை இன்னொரு பதிவில் பார்ப்போம்.

மணிக்கூட்டுக் கோபுர அழகுபடுதல் மற்றும் மேம்படுத்தல் செயற்பாடுகள் தொடரும் என்றும் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post