மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக அதிபர் ஆசிரியர்கள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை பேருந்து நிலையம் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் ஆசிரியர் மாணவர் பெற்றோர்களை துன்புறுத்துகின்ற கல்வி நெருக்கடிக்கு உடனடியாக தீர்வினை வழங்கு, 24 வருட ஆசிரியர் அதிபர் சம்பளம் முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வினை வழங்கு, இலவசக் கல்வியை இராணுவமயமாக்கல் கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக இரத்துச் செய் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கல்வியை விற்கும் கொத்தலாவல சட்டமூலத்தை வாபஸ் பெறு, பிள்ளைகளின் கல்வியை சிதைக்காதே, இல்லாது ஒழித்த எமது சம்பளத்தை எனக்குத்தா, ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்த்து வை உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கோஷங்களை எழுப்பி இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
Post a Comment