அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் மாகாணங் களுக்கு இடையிலான பயணம் செய்ய அனுமதி வழங்கப் படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய தேவைக்காகவும், நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்கும் மற்றும் மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்காகவும் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என அவர் தெரி வித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய, முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளியைப் பின் பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 214 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 30 ஆம் திகதி முதல் இது வரையில் 49,259 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
Post a Comment