அயர்லாந்து பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 2வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது, இதன் மூலம் அயர்லாந்து தென் ஆப்பிரிக்கா அணியை முதல் முறையாக வென்று வரலாறு படைத்தது
அயர்லாந்து அணித்தலைவர்
ஆண்டி பால்பர்னியின் அபார சதத்துடன் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 247 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி அடைய 2வது போட்டியில் வென்று அயர்லாந்து 3 போட்டிகள் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது. முதல் போட்டி மழையால் நடைபெறவில்லை.
அயர்லாந்துஅணித்தலைவர்
பால்பர்னி தனது 7வது ஒருநாள் சதத்தில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் விளாசினார். ஹாரி டெக்டார் என்ற வீரர் 68 பந்துகளில் 79 விளாசினார். இவர் 6 பவுண்டரி, 4 சிக்சர்களை அடித்தார்.
பால்பர்னி தன் சதத்தில் பால் ஸ்டர்லிங் (27), மற்றும் மெக்பிரைன் (30) ஆகியோர் உடன் அரைசதக் கூட்டணி அமைத்தார். பிறகு டெக்டாரின் அதிரடி இன்னிங்ஸிலும் பால்பர்னி அரைசதக் கூட்டணி அமைத்தார், பிறகு டெக்டர்- டாக்ரெல் (23 பந்தில் 45, 5 பவுண்டரி 2 சிக்ஸ்), கூட்டணி சேர்ந்து 46 பந்துகளில் 90 ரன்கள் விளாசினர்.
தென் ஆப்பிரிக்கா பீல்டிங்கும் படு சொதப்பலாக மாறியது. ஸ்டர்லிங்கிக்கு 6 மற்றும் 10 ரன்களில் கேட்சை விட்டனர். டெக்டருக்கு டக்கிலும் பால்பர்னிக்கு 74 ரன்களிலும் கேட்சை விட்டு சொதப்பினர்.
குவிண்டன் டி காக்கிற்கு ஓய்வு அளித்து தவறு செய்ய தென் ஆப்பிரிக்கா எய்டன் மார்க்ரம் (5), கேப்டன் தெம்பா பவுமா (10) ஆகியோர் விக்கெட்டுகளை விரட்டலில் சடுதியில் இழந்தது. ஜேனிமன் மலான் (84), ரசி வான் டெர் டியூசன் (49) 108 ரன்கள் கூட்டணி அமைத்தனர்.
ஆனால் இருவருமே ஸ்பின் பவுலிங்குக்கு 8 பந்துகள் இடைவெளியில் வெளியேறினர். அதன் பிறகு தென் ஆப்பிரிக்கா சரிந்தது, கேஷவ் மகராஜ், ஆன்ரிச் நார்ட்டியேவை ஆதைர் அடுத்தடுத்து வீழ்த்தினார். இதையடுத்து 49வது ஓவரில் வரலாற்று வெற்றியைப் பெற்றது அயர்லாந்து.
ரபாடா, நார்ட்யே, பெலுக்வயோ, மகராஜ், ஷம்சி போன்ற சிறந்த பவுலர்கள் இருந்தும் அயர்லாந்தை 290 ரன்கள் அடிக்கவிட்டு பெரிய தவறிழைத்தது தென் ஆப்பிரிக்கா. மாறாக மார்க் அதைர், ஜோஷ் லிட்டில், ஆண்டி மெக்பிரைன் ஆகியோரை வைத்தே தென் ஆப்பிரிக்காவை 247 ரன்களுக்குச் சுருட்டியது அயர்லாந்து. ஆட்ட நாயகனாக பால்பர்னி தேர்வு செய்யப்பட்டார்
Post a Comment