நாவற்குழி கோவிட் 19 தனிமைப்படுத்தல் மையத்துக்கு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் இன்று களவிஜயமொன்றை மேற்கொண்டார்.
அங்கு தங்கியுள்ள மக்களை சந்தித்து அவர்களின் சுகநலன்களை விசாரித்ததோடு அவர்களது தேவைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.
அத்துடன் அங்கு பணியாற்றும் முன்னிலை பணியாளர்களுடன் உரையாடிய அவர், இக்காலகட்டத்தில் அவர்கள் ஆற்றும் சேவைக்கு மக்கள் சார்பிலான நன்றியைத் தெரிவித்தார்.
மேலும் சாந்தியகம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் அன்பளிப்பு செய்யப்பட்ட சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு கருவிகள், தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்களையும் அங்கஜன் இராமநாதன் அவர்கள், தனிமைப்படுத்தல் மையத்தின் பொறுப்பதிகாரியிடம் கையளித்தார்.
Post a Comment