உள்நாட்டுப் போர் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விபரங்களை இற்றைப்படுத்தும் பணி பிரதேச செயலகங்களினால் முன்னெடுக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலதிக மாவட்ட செயலாளர் சு.முரளிதரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போரினால் இடம்பெயர்ந்து தற்போதும் வேறு இடங்களில் வசித்து வரும் குடும்பங்களின் விபரங்கள் மீளாய்வு செய்யப்படுகின்றன. பல்வேறு பிரதேசங்கள் மீள்குடியமர்த்துவதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் மீள்குடியமராத குடும்பங்களின் விபரங்கள் அவர்கள் தற்போது வசிக்கும் பிரதேச செயலகங்களினால் இற்றைப்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே இடம்பெயர்ந்து இதுவரை மீள்குடியமராத மக்கள் தாங்கள் தற்போது வசிக்கும் பிரதேச செயலகத்துடன் தங்கள் பெயர் குறிக்கப்பட்ட பட்டியல் உள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் கேட்டுள்ளார் என்றுள்ளது.
Post a Comment