இலங்கையில் கிரிக்கெட் அவமரியாதைக்கு உள்ளாகியுள்ளது என முன்னாள் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி தொடர்ந்து போட்டிகளில் தோல்வியடைவது குறித்தும் வீரர்களின் ஒழுக்கமற்ற நடவடிக்கைகள் குறித்தும் பரவலாக பேசப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
நான் அணித்தலைவராகயிருந்தவேளை எனது அணியில் விளையாடிய வீரர்கள் மாத்திரமே உண்மையில் நாட்டிற்காக விளையாடினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னர் ஒரு காலத்தில் போட்டியில் தோல்வியடைந்தால் நாங்கள் வெளியில் செல்வதற்கு வெட்கமடைந்தோம் எனவும் அர்ஜூன தெரிவித்துள்ளார்.
ஆனால் இன்று அவ்வாறான நிலையில்லை இதன் காரணமாக இலங்கை அணி விளையாடும் விதத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
நான் சில வீரர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றேன், சிலரை தடை செய்திருக்கின்றேன்,என தெரிவித்துள்ள அவர் கிரிக்கெட் என்பது வெறுமனே பட்டால் பந்தை அடிப்பது மாத்திரமல்ல கிரிக்கெட் என்பது வீரர்களை முழுமையாக நிர்வகிப்பது எனவும் தெரிவித்துள்ளார்.
எங்கள் வீரர்களை அவமானப்படுத்த வேண்டாம் என நான் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment