முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு, நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளது.
நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டு குறித்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க தெற்காசியாவில் நன்கு அறியப்பட்ட நடிகர் என்றும் மிகவும் தாழ்மையான நபர் என்றும் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இந்த கோரிக்கையை ரஞ்சன் ராமநாயக்க சார்பிலான முறையீடாக எண்ணி அதனை பரிசீலிக்குமாறு கரு ஜயசூரிய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment