யாழ். ஜின்னா மைதானத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை - Yarl Voice யாழ். ஜின்னா மைதானத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை - Yarl Voice

யாழ். ஜின்னா மைதானத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை



யாழ்ப்பாணம் மர்யம் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று இம்முறையும் சிறப்பாக நடைபெற்றது.

அந்த வகையில்  பெருநாள் தொழுகை இன்று (21) காலை 6.30 மணியளவில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி ஜின்னா மைதானத்தில் மௌலவி எம்.ஏ. பைசர் (மதனி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. பெருநாள் தொழுகையில் பெருந்திரளான யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் கலந்து சிறப்பித்தமை விசேட அம்சமாகும்.
 
கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளைப் பின்பற்றி தொழுகை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post