பாலியல் சீண்டல்கள் எந்த துறையில்தான் இல்லை? – பாண்டவர் இல்லம் மல்லிகா - Yarl Voice பாலியல் சீண்டல்கள் எந்த துறையில்தான் இல்லை? – பாண்டவர் இல்லம் மல்லிகா - Yarl Voice

பாலியல் சீண்டல்கள் எந்த துறையில்தான் இல்லை? – பாண்டவர் இல்லம் மல்லிகா



பாண்டவர் இல்லம் தொடரில் அடாவடி மல்லிகாவாகக் கலக்கிக்கொண்டிருக்கும் ஆர்த்தி சுபாஷ், தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் அப்படிப்பட்டவர்தானாம். ஒரு நூலிழை இடைவெளி மட்டுமே ஆர்த்திக்கும் மல்லிகாவுக்கு இருக்கிறது என்று சமீபத்திய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டார். மேலும், இதுபோன்ற பல சுவாரசிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

நடிப்பு பற்றி எதுவும் தெரியாமல்தான் போனேன். பிறகு ஏராளமான விஷயங்களை கற்றுக்கொண்டேன். மல்லிகா கதாபாத்திரத்திற்கு எனக்கும் பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை. என்னை பார்த்துத்தான் எழுதியிருக்கிறார் என்று நிறையப் பேர் கிண்டல் செய்வதுண்டு. இந்த துறைக்கு வந்த புதிதில் ஏராளமான சவால்களை எதிர்கொண்டேன்

பெண்களுக்கு எல்லா இடங்களிலும் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. பள்ளியில் இருந்து வேலை பார்க்கும் இடம் வரை பாலியல் சீண்டல்கள் இல்லாத இடம் எது? மீடியா என்பதால், இன்னும் வெட்டவெளிச்சமாக தெரிகிறது. அவ்வளவுதான். தைரியமாக இருக்கும் பெண்கள் எங்கு இருந்தாலும் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க முடியும். பயந்து இருப்பவர்கள் எங்கு இருந்தாலும் பயந்துகொண்டேதான் இருப்பார்கள்” என்று பகிர்ந்துகொண்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post