யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் இருந்து மாகாணம் தாண்டிப் பயணிக்க முயன்ற இரு இ.போ.ச. பஸ்கள் பொலிஸாரால் இன்று காலை திருப்பி விடப்பட்டுள்ளன.
வவுனியா, இரட்டைப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் பஸ்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது, பஸ்ஸில் அத்தியாவசிய தேவைகள் அற்றோர் பயணித்ததை அடுத்தே இரு பஸ்களும் திருப்பி விடப்பட்டன என்று தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை எதிர்வரும் 19ஆமு் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் மற்றும் அத்தியாவசிய தேவை உடையோருக்காக மாகாணங்களுக்கு இடையே மட்டுப்படுத்தப்பட்ட பஸ் மற்றும் ரயில் சேவைகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment