நெதர்லாந்தில் பிரபல ஊடகவியலாளர் பீட்டர் ஆர் டி வ்ரிஸ் ஆயுததாரிகளால் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுளார். பாதாள உலக குற்றவாளிகள் தொடர்பான செய்திகளை வெளியுலகுக்கு சொல்லும் விதமான நிகழ்ச்சிகளால் மக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்ற பீட்டர் ஆர் டி வ்ரிஸ் நேற்று செய்வாய்க்கிழமைஅம்ஸ்ரடாம் வீதி ஒன்றில் தலையில் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார்.
இது தொடர்பாக சுட்டவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துளனர்.
மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பீட்டர், தேசிய அளவில் நீதியை நிலைநாட்ட அயராது பாடுபட்ட ஒரு சிறந்த நாயகன் என அம்ஸ்ரடாம் முதல்வர் பெம்கி கால்சிமா செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.
ஊடகவியலாளர் டி வாரிஸ் கடந்த 2008 இல் பொது விடயங்களுக்காக சர்வதேச எமி விருது பெற்றவராவார் என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment