வெர்ஜின் நிறுவன உரிமையாளர் ரிச்சர்ட் பிராண்டசனின் வெற்றிகரமான விண்வெளி எல்லைக்கான பயணத்தை தொடர்ந்து உலகின் முதலாவது பணக்காரரான அமேசான் நிறுவன உரிமையாளர் ஜெப் பேஸ்சோஸ் இன்று தனது விண்வெளிக்கான பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இது புதிய தனியார் விண்வெளி சுற்றுலா துறையின் மற்றுமொரு மைல்கல் ஆகும்.
அமெரிக்க டெக்சாஸ் நேரம் காலை 8 மணியளவில் டெக்சாஸ் பாலைவனத்தில் இருந்து பயணிக்க உள்ளது இவ்விண்கலம். கடந்த 9 நாட்களுக்கு முன் பிரான்சனின் வெர்ஜின் கலக்ட்டிக் விண்வெளி சுற்றுலா நிறுவன விண்கலம் நியூ மெக்ஸிகோவில் இருந்து வெற்றிகரமாக விண்வெளி எல்லையை தொட்டு வந்த நிலையில் பில்லியனர் ஜெப் மற்றும் குழுவினர் 11 நிமிடங்கள் விண்வெளியில் பயணம் செய்வார்கள் என தெரியவருகிறது.
பிரான்சனின் விண்கலத்தை விட (Virgin Galactic 53 மைல் ) ஜெப்பின் விண்கலம் விண்வெளி எல்லையில் இருந்து 9 மைல் (Blue Origin 62) உயர செல்லும் எனவும் உலக வரலாறில் சாதாரண மக்களை கொண்ட விமானிகளற்ற முதலாவது விண்கலம் இதுவாகும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்.
அமேசான் உரிமையாளர் ஜெப் அவரது சகோதரர் மார்க், 82 வயதுடைய வொல்லி பங்க் மற்றும் 18 வயதுடைய மேல்நிலை பாடசாலை பட்டதாரி ஒலிவேர் ஆகியோர் ப்ளூ ஒரிஜீனின் நியூ ஷெப்பர்ட் விண்கலத்தில் செல்லவுள்ளனர்.
நியூ ஷெப்பர்ட் ஆனது மணிக்கு 2,200மைல் வேகத்தில் பயணிக்க உள்ளது .
Post a Comment