பெகஸஸ் ஸ்பைவெயரினை பயன்படுத்தி பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் கையடக்க தொலைபேசி ஹக்செய்யப்பட்டதா என்பதுகுறித்த விசாரணைகளை பாக்கிஸ்தான் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
பாக்கிஸ்தான் பிரதமர் முன்னர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம்ஹக் செய்யப்பட்டதா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக பாக்கிஸ்தானின் தகவல் தொடர்பாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் என்எஸ் ஓ நிறுவனம் அறிமுகப்படுத்தி பெகசஸ்ஸ்பைவெயரை பயன்படுத்தி இம்ரான்கானின் முன்னைய தொலைபேசி இலக்கம் ஹக்செய்யப்பட்டது என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
ஹக் செய்யப்பட்டவர்கள் என வோசிங்டன் போஸ்ட் வெளியிட்ட பட்டியலில் இம்ரான் கானின் பெயர் இடம்பெற்றுள்ளது. இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பாக்கிஸ்தானின் தகவல்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய நிறுவனம் நாடுகளிற்கு வழங்கிய தொலைபேசி மல்வயரினை பல நாடுகள் மனித உரிமை ஆர்வலர்கள் சட்டத்தரணிகள் ஆகியோரிற்கு எதிராக பயன்படுத்தியுள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெகசஸ் எனப்படும் கணிணி மென்பொருள் குறித்த குற்றச்சாட்டுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை உலகின் பல முன்னணி நாளேடுகளில் வெளியாகியிருந்தன. பெகசஸ் ஐபோன்களையும் அன்டிராய்ட் போன்களையும் ஹக்செய்கின்றது,
அதனை இயக்குபவர்கள் குறிப்பிட்ட கையடக்க தொலைபேசிகளில் உள்ள படங்கள் தகவல்களை களவாடுவதற்கு உதவுகின்றது என நாளேடுகள் தெரிவித்துள்ளன.
ஹக் செய்யப்பட்டனர் என வெளியான பட்டியலில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை நாங்கள் தொடர்புகொண்டுள்ளோம் என நாளேடுகள் தெரிவித்துள்ளன. ஹக் செய்யப்பட்டவர்களின் பட்டியலில் அரச தலைவர்கள் உட்பட அரசியல்வாதிகள் வர்த்தக பிரமுகர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அரச குடு;ம்பங்களைசேர்ந்தவர்களின் பெயர் விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
சிஎன்என் நியுயோர்க் டைம்ஸ் அல் ஜசீரா உட்பட 180 நாடுகளை சேர்ந்த பத்திரிகையாளர்களின் கையடக்க தொலைபேசிகளும் ஹக் செய்யப்பட்டுள்ளன. இந்தியா சவுதி அரேபியா ஐக்கிய இராச்சியம் உட்பட பத்து நாடுகளை சேர்ந்தவர்களே முக்கியமாக இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment