இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தின் கொரோனா தொற்று நிலைமையினை கருத்தில் கொண்டு குறித்த பகுதிகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் கையளிக்கும் ஆரம்ப நிகழ்வு இன்று யாழ் போதனா வைத்திய சாலையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வு இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் யாழ் மாவட்ட தலைவர் ஏ.பாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த பாதுகாப்பு உபகரணங்களை யாழ் போதனாவைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா விடம் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் யாழ் மாவட்ட கிளையினர் கையளித்தனர்.
இங்கு தொற்று ஏற்படாதவாறான அங்கிகள் 28,கைகள் கழுவும் செயற்கை இரசாயனம் 28,மற்றும் கையுரைகள் 78 மற்றும் எனைய மருந்துப்பொருட்கள் உள்ளடங்கலாக இவை கையளிக்கப்பட்டன.
இதில் வைத்திய அதிகாரிகள்,சுகாதார பரிசோதர்கள்,செஞ்சிலுவைசங்கத்தி ன் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Post a Comment