தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட உயர் பதவி நியமனங்கள் என்பது சிறிலங்கா அரசினால் மேன்மேலும் தமிழர்களை இன ரீதியாக அழிப்பதன் நீட்சியே ஆகும்.
நாட்டில் உயர் பதவிகள் வகிப்பதற்கு அனுபவம் வாய்ந்த பல கல்வியாளர்கள் தமிழர் தரப்பில் இருக்கும் போது அவர்களை புறக்கணித்து சிங்களவர்களை நியமிப்பது என்பது தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் எந்தவொரு காலத்திலும் ஒரு நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்தாது.
சிறிலங்கா அரசு இன்று பதவி நியமனம் என்ற வடிவிலான ஒரு ஆயுதத்தை தமிழர்களை ஒடுக்குவதற்கு திட்டமிட்டே பெரும்பான்மை இனத்திடம் கையளித்திருக்கின்றது இந்த சூழ்ச்சியை தமிழர் தரப்பு தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழர் விடையங்களில் எந்தவொரு வடிவிலும் சிறிலங்கா அரசு ஒரு போதும் சமரசத்திற்கு வராது என்பதை இதன்மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
சிறிலங்கா அரசின் இந்த கடுமையான போக்கை தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.
Post a Comment