விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அதன் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனைப் பெருமைப்படுத்தும் விதமாக முகப் புத்தகத்தில் கருத்துக்களை பதிவுசெய்த திருமலை வாலிபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை பொலிஸ்நிலைய குற்றத் தடுப்பு பிரிவினரால் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
குறித்த கைது தொடர்பில் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண உறுதிப்படுத்தினார்.
குறித்த இளைஞனிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெறும் நிலையில் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Post a Comment