தடுப்பூசி ஏற்றல் குறித்து வடக்கு சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice தடுப்பூசி ஏற்றல் குறித்து வடக்கு சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice

தடுப்பூசி ஏற்றல் குறித்து வடக்கு சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவித்தல்



 வட மாகாணத்தில் கோவிட்-19 தொற்றுக்கான தடுப்புமருந்தேற்றல் திட்டம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுவதாக, நான் குறிப்பிட்டதாக சில ஊடகங்களில் இன்று செய்தி வெளியாகியுள்ளது. இதன் உண்மை நிலையினை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

 யாழ் மாவட்டத்திற்கு 2வது கட்டமாக தடுப்பூசிகள் வழங்குவதற்கு கடந்த சனிக்கிழமை 3ஆம் திகதி 50,000 சினோபாம் தடுப்பூசிகள் யாழ்மாவட்ட சுகாதார திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. 

2ஆம் கட்ட தடுப்பூசியேற்றும் பணிகள் கடந்த யூன் மாதம் 5ஆம் திகதி திங்கட்கிழமை முதல் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களால் இராணுவ மருத்துவ குழுக்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகின்றன.

 இத்திட்டத்தின்கீழ் யூன் மாதம் 5ஆம் திகதி முதல்நாளில் யாழ் மாவட்டத்தில் 9,462 பேருக்கும், 6ஆம் திகதி இரண்டாம் நாளில் 9இ453 பேருக்குமாக, முதல் இரண்டு நாட்களில் 18இ915 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
 
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் அம்மாவட்ட சுகாதார திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் தடுப்பூசியேற்றும் பணிகள் யூன் மாதம் 5ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இடம்பெற்றுவருகின்றன. இதற்கான தடுப்பூசிகள் இராணுவத்தினருக்கே நேரடியாக வழங்கப்பட்டுள்ளன.
 
 
வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வடமாகாணம்

0/Post a Comment/Comments

Previous Post Next Post