கிளிநொச்சியில் குறுநில மன்னன் அக்கிராசனுக்கு வணக்கம் செலுத்த பொலிஸார் தடை - Yarl Voice கிளிநொச்சியில் குறுநில மன்னன் அக்கிராசனுக்கு வணக்கம் செலுத்த பொலிஸார் தடை - Yarl Voice

கிளிநொச்சியில் குறுநில மன்னன் அக்கிராசனுக்கு வணக்கம் செலுத்த பொலிஸார் தடை



கிளிநொச்சி அக்கராயனை ஆண்ட குறுநில மன்னன் அக்கிராசனுக்கு வணக்கம் செலுத்த முற்பட்டவர்களிடம் இருந்து பாதுகாப்புத் தரப்பினர் மாலையை பறித்தெறிந்த சம்பவத்தால் அக்கராயனில் சற்று முன்னர் (4.30 மணியளவில்) பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 

இன்று  கரும்புலி நாள் என்பதால்  நினைவு வணக்கம் செலுத்தவேண்டாம் என்று பொலிஸார் உட்பட்ட படைத்தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

எனினும்  13ஆம் நூற்றாண்டில் அக்கராயன் பிரதேசத்தை ஆட்சி செய்த அக்கிராசன் என்ற குறுநில மன்னனுக்கு 2018 ஆம் ஆண்டு ஜூலை 05ஆம் திகதியாகிய இதே நாள் சிலை திறந்து வைக்கப்பட்டது. 

இதனால் சிலை திறக்கப்பட்ட நாளில் மன்னனுக்கு வணக்கம் செலுத்துவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கரைச்சி பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் கிராமத்து மக்கள் எனப் பலரும் அங்கு பிரச்சனமாகியிருந்தனர். அனுமதி பெறப்படும்போது நிகழ்வை நாளைய தினம் அனுசரிக்குமாறு முதல் பொலிஸார் கூறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுகிறது.

இந்த சிலை கிளிநொச்சி அக்கராயன் அம்பலப்பெருமாள் சந்தியிலேயே இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.

 அக்கிராசன் மன்னன் கிளிநொச்சியின் அக்கராயன் பிரதேசத்தை ஆட்சி செய்துள்ளதுடன் அக்கராயன் குளத்தையும் கட்டுவித்துள்ளார் இதனால் அக்கராயன் என காலப்போக்கில் அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post