இலங்கை கொரோனா நான்காவது அலையை எதிர்கொள்ளும் விளிம்பில் இருப்பதாக இலங்கை மருத்துவ சங்கம் கூறியுள்ளதனைத் தொடர்ந்து, நாடு நான்காவது அலைக்குச் செல்கிறது என்று கூறுவதற்குஎந்த அறிகுறியும் இல்லை எனஎன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று இலங்கை மருத்துவ சங்கம் இலங்கை கொவிட் -19 நான்காவது அலையின் முதல் கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும், பயணக் கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளித்த சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர். ரஞ்ஜித் பட்டுவந்துவ தற்போது நாடு மூன்றாவது அலைகளின் இறுதி கட்டத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
"தற்போதைய சூழ்நிலையைப் பார்த்து அதை கருத்திற்கொள்வது வெவ்வேறு கண்ணோட்டங்களாக இருக்கலாம். இருப்பினும், தொற்றுநோயியல் பிரிவிலுள்ள தரவு மற்றும் புள்ளிவிவரங்களை அனைவரும்
பின்பற்ற வேண்டும், ”என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொற்றுநோய் வளைவின் படி, இந்நேரத்தில் கொவிட் -19 நோய்த்தொற்றுகளில் கீழ்நோக்கி போக்கு காணப்படுவதாகவும், எனவே, நான்காவது அலையின் உடனடி அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் முடிவுக்கு வரமுடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"இருப்பினும், கட்டுப்பாடுகள் ஏறக்குறைய தளர்த்தப்பட்ட சூழ்நிலையில் மக்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதிலே இது தங்கியுள்ளது" என்றார்.
Post a Comment