கோப்பாய் கோண்டாவில் பகுதியில் 30ஆம் திகதி கோப்பாய் செல்வபுரம் பகுதியில் உள்ள வீடியோ ஒளிப்பதிவு செய்யும் இடத்திற்குள் புகுந்த இனந்தெரியாத குழுவொன்று அட்டகாசம் புரிந்ததோடு அதில் 8 பேர் வாள்வெட்டுக்கு இலக்காகி ஆட்டோ வாகனங்களை சேதப்படுத்தியதோடு ஒளிப்பதிவு கலையகத்தினையும் தீ மூட்டி கொளுத்தியசம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் , மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரான்சிஸ் தலைமையிலான பொலீஸ் அணி பிரதான சந்தேகநபர் மூவரை கைது செய்துள்ளதோடு கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து3 கஜேந்திரா வாளும் குறித்த சம்பவத்திற்கு பாவிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் சாதாரண வாள் இரண்டையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொண்டவ விசாரணையின் படி 14 பேர் கொண்ட அணியினர் 5 மோட்டார் சைக்கிளில் சென்று குறித்த சம்பவத்தை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்
சம்பவத்துடன் தொடர்புடையோர் நால்வர் தெல்லிப்பளை பகுதியை சேர்ந்தவர் கள்எனவும் இருவர் பொம்மை வெளி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும்
யாழ்ப்பாணப் பகுதியை சேர்ந்த ஒன்பது பேரும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்களாக அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர் மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்கள் மிக விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் குறித்த சந்தேக நபர்களை மறைத்து வைத்திருந்துஉதவி புரிவோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ் தெரிவித்தார்
Post a Comment