நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை நாளை திங்கட்கிழமை காலை 8 மணி தொடக்கம் ஆரம்பிக்கப்படுவதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட வடக்கின் வைத்தியசாலைகளில் அவசர மருத்துவ சேவை தவிர்ந்த ஏனையவை பாதிக்கப்படவுள்ளன.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள், மருந்தாளர்கள் மற்றும் கதிரியக்கவியலாளர்கள் நாளாந்த சேவையில் நாளை முதல் ஈடுபடமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் முன்னெடுக்கப்படும் இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் பணியாற்றும் நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுநர்களும் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.
இதனால் நீண்ட தூரத்திலிருந்து ஆய்வுகூடப் பரிசோதனை உள்ளிட்டவைகளுக்கு வைத்தியசாலைகளுக்கு செல்வோர் தேவையற்ற அலைச்சலை தவிர்ப்பது பொருத்தமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் உயிர்காக்கும் அவசர சேவைகளுக்கு நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுநர்கள் சேவையாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.-
Post a Comment