யாழில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! இன்றும் சில பகுதிகள் முடக்கம் - Yarl Voice யாழில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! இன்றும் சில பகுதிகள் முடக்கம் - Yarl Voice

யாழில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! இன்றும் சில பகுதிகள் முடக்கம்



யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களில் 48 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டது.

அதனையடுத்து பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியினால் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளருக்கும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிபாளருக்கும் நேற்றிரவு முன்வைக்கப்பட்ட கோரிக்கை அமைய உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை வடமேற்கு (ஜே388) கிராம அலுவலகர் பிரிவே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது. அந்தக் கிராமத்தில் 310 குடும்பங்களைச் சேர்ந்த 940 பேர் வசிக்கின்றனர்.

இதேவேளை, பருத்தித்துறை முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் குறுக்குத் தெருக்களிலும் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.2

0/Post a Comment/Comments

Previous Post Next Post