யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பட்டதாரியான இவர் இலங்கைப் பல்கலைக்கழக நிறைவேற்று உத்தியோகத்தர் சேவையில் உதவி பதிவாளராக இணைந்து உருகுணப் பல்கலைக்கழகத்தில் தனது சேவையை ஆரம்பித்தார்.
அதன் பின்னர் சிரேஷ்ட உதவிப் பதிவாளர் பிரதிப் பதிவாளர் எனப் பதவி உயர்வுகளைப் பெற்று பல பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய அனுபவம்மிக்கவர்.
குறிப்பாக இலங்கை பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் நிர்வாகிகளின் குழுமத்திற்கு செயலாளராக இரண்டு தடவைகள் பணியாற்றியவர்.
மும் மொழிகளிலும் தேர்ச்சி மிக்க இவர் பல்கலைக்கழக நிர்வாகத்தின் பல அலகுகளிலும் கடமையாற்றிய அனுபவம் மிக்கவர். சிறிதுகாலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளராகவும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment