பாராளுமன்ற உறுப்பினர் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீப்பற்றலுக்குள்ளாகி சிகிச்சை பலனின்றி மரணமான சிறுமிக்கு நீதி கோரி நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் கெளசல்யா சிவா முன்வைத்த கோரிக்கை ஏகமனதாக. தீர்மானம் நிறைவேற்றப்பட்டடது.
இன்று ( 20 / 07 / 2021) நடைபெற்ற நல்லூர் பிரதேச சபையின் 40 வது மாதாந்த அமர்விலே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத் தீர்மானம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்;
பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிலே குழந்தைத் தொழிலாளியாக பணியாற்றி தீப்பற்றலின் காரணமாக வைத்திய சாலையில் அனுமதித்த பின் மரணமான கிஷாலினியின் மரணத்திற்க்கு நீதி கோரி சம்பந்தபட்ட அனைத்து தரப்பினருக்கும் கோரிக்கை மனு அனுப்புதல் வேண்டும்.
அத்தோடு இம் மரணத்தின் வைத்திய அறிக்கை பிரகாரம் அச்சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப் பட்ட நிலையில் இவ்வாறான வன்கொடுமைகளுக்கு எதிராக கௌரவ உறுப்பினராகவும் ஒரு தாயாகவும் கௌரவ சபையிலே எனது கண்டனத்தையும் பதிவு செய்கின்றேன்.
இக் கோரிக்கையானது இனத்திற்கோ மதத்திற்கோ எதிராக அல்ல மாறாக குற்றவாளிகளுக்கு எதிரானது. எனவே இச்சிறுமி விவகாரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்க ஒத்துழைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் கண்டனம் தெரிவித்ததுடன் பெண்கள் சிறார்கள் அமைச்சுக்களுக்கும் நீதி கோரி கோரிக்கை அனுப்பநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
Post a Comment