தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவர் ஓவியம்! வியந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின் - Yarl Voice தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவர் ஓவியம்! வியந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின் - Yarl Voice

தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவர் ஓவியம்! வியந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்



ட்விட்டர் பக்கத்தில் கணேஷ் என்ற பெயரில் இருக்கும் ஓவியர், தமிழ் பிராமி, வட்டெழுத்துகள், தற்போதைய நவீனப்படுத்தப்பட்ட எழுத்துகளைப் பயன்படுத்தி திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்துள்ளார்.

இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து, கிபி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துகள்வரை உள்ள தமிழ் எழுத்துகள் 741 கொண்டு திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதனை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டேக் செய்துள்ளார்.

அதற்கு பாராட்டு தெரிவித்த மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘அன்பின் வழியது உயிர்நிலை" என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post