யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாட்டை நிறுத்தி பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வட மாகாண ஆளுநரின் சார்பில் அவரின் செயலாளர் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் மிக வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அந்த வகையில் நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், யாழ் பல்கலைக்கழகம் மட்டும் பல்கலைக்கழக துணைவேந்தரின் உத்தரவுக்கமைய இயக்கப்படுகின்றது.
இதனால் யாழில் கொரோனா தொற்று தீவிரமடையும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த கடிதத்தின் பிரதிகள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா, சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment