யாழ்ப்பாணம் குறித்து இந்தியா ஏன் அதிக அக்கறை காட்டுகின்றது என யாராவது கேட்கின்றீர்களா ?மட்டக்களப்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க - Yarl Voice யாழ்ப்பாணம் குறித்து இந்தியா ஏன் அதிக அக்கறை காட்டுகின்றது என யாராவது கேட்கின்றீர்களா ?மட்டக்களப்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க - Yarl Voice

யாழ்ப்பாணம் குறித்து இந்தியா ஏன் அதிக அக்கறை காட்டுகின்றது என யாராவது கேட்கின்றீர்களா ?மட்டக்களப்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க



யாழ்ப்பாணம் குறித்து இந்தியா ஏன் அதிக அக்கறை காட்டுகின்றது என யாராவது கேட்கின்றீர்களா என அமைச்சர் பிரச்சன்ன ரணதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு விமானநிலையத்தினை அபிவிருத்தி செய்வது குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டார் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் தெரிவித்துள்ளதாவது

இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின்  வேண்டுகோளுக்கு அமைய இங்கு வந்துள்ளோம் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் போது விமான நிலையத்தின் தேவைப்பாடு தேவைப்படுகின்றது எனவே விமானநிலையத்தை அபிவிருத்தி செய்யவேண்டும்.
 
நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவின் நல்லாட்சி காலத்தில் இடம்பெற்றதற்கு பொறுப்புக் கூறமுடியாது. இந்த இந்த விமானநிலையத்தை  பல வருடங்களுக்கு முன்  சர்வதேச விமானசர்வதேச விமானநிலையமாக  அபிவிருத்தி செய்ய  வர்த்தமானி வெளியிடப்பட்டது ஆனால் அந்த அளவிற்கு அபிவிருத்தி செய்யப்படவில்லை அதேபோன்ற உள்ளூர் விமான சேவையும் அதை போலத்தான்.  எங்களால் இதனை  இரண்டுவருடத்தில் செயற்படுத்தமுடியும் 

மட்டக்கள்ளப்பு மாவட்டம் சுற்றுலாத்துறைக்கு பிரசித்தி பெற்ற இடம் சுற்றுலாத்துறையில் வரும் வருமானம் முழுநாட்டுக்கும் பபயன்படும்படியாக அது செயற்படுத்தப்படவேண்டும் எனவே நீண்டகாலமாக சுற்றுலா பயணிகள்  தங்கி நிற்க கூடியதான சூழலை அமைக்கவேண்டும் 

ஒரு பிரதேசம் அபிவிருத்தியடைய வேண்டும் என்றால் பெரிய ஹோட்டல் இருக்கவேண்டும் அப்போது . அவ்வாறு பெரிய ஹோட்டல்கள் இல்லாவிடில் கிழக்கு மாகாண இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் வருபவர்கள் இல்லாமல் போகும். 

இந்தியா அமெரிக்கா போன்ற பல நாடுகள் உதவி செய்கின்றது உதவி செய்கின்ற பல நாடுகளில் இருந்து உதவிகளை பெறுகின்றோம். சீனா முன்னிற்பது எனகேட்கின்றீர்கள் ஆனால்  யாராவது   யாழ்ப்பாணம் குறித்து இந்தியா ஏன் அதிக அக்கறை காட்டுகின்றதுஎன்று கேடகின்றீர்களா?

 சீன பிரச்சனை எங்களுக்கு இல்லை எதிர்கட்சிக்குத்தான்  எங்களுக்கு எந்தநாடு உதவிசெய்கின்றதே அந்த உதவியைப் பெற்று அபிவிருத்தியை மேற் கொள்ளுவோம இதற்கும் சீனா உதவி செய்ய இருந்தால் நாங்கள் அதனையும் பெற்றுக் கொள்ளுவோம் 

யுத்தம் இடம்பெற்றபோது வடகிழக்கில் சிறுவர்கள் கழுத்தில்  சையனட்குப்பியுடன் இருந்தார்கள்  அந்த சிறுவர்கள் பாhடசாலை சென்றது இந்த யுத்தம்  முடிந்த பின்னர். 

வடக்கில் வசந்தம் கிழக்கில் வசந்தம் திட்டத்தை செய்தது பசில்;ராஜபக்ஷ ஆனால் நல்லாட்சி அரசாங்கம் 5 வருடம் ஆட்சி செய்தது ஆனால் எதுவும் இடம்பெறவில்லை ஆனால் நாங்கள் கிழக்கில் வடக்கில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்

அதேவேளை பசில் ராஜபக்ஷ பாராளுமன்றம் வந்தால் இந்த பிரதேசம் அபிவிருத்தி அடையும் என்ற பாரிய நம்பிக்கை இருக்கின்றது எனவே அவர் வருவது இந்த பிரதேசத்திற்கு மிகவும் நல்லது என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post