நெல்லியடிப் பகுதியில் இன்று அதிகாலை மருந்தகத்தை உடைத்து உட்புகுந்த திருடன் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், சில மருந்துப் பொருட்களையும் திருடிச் சென்றுள்ளார்.
அதிகாலை 4 மணியளவில் நெல்லியடி நகரில் கொடிகாமம் வீதியில் உள்ள மருந்தகத்தில் பூட்டை உடைத்து உள் நுழைந்த திருடன் அங்கிருந்த ரொக்கப் பணத்தையும் மருந்துப் பொருட்களையும் திருடி உள்ளான்.
இத் திருட்டு இடம்பெற்ற சம்பவம் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. இதனை வைத்து திருடனை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment