கிரிக்கெட் தொடரை வெற்றி பெற்ற யாழ் ஊடக அமைய அணி - Yarl Voice கிரிக்கெட் தொடரை வெற்றி பெற்ற யாழ் ஊடக அமைய அணி - Yarl Voice

கிரிக்கெட் தொடரை வெற்றி பெற்ற யாழ் ஊடக அமைய அணி


யாழ்.ஊடக அமைய அணிக்கும் சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டு களகத்திற்கும் இடையில் நட்பு ரீதியான துடுப்பாட்ட போட்டி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மேற்படி களக மைதானத்தில் நடைபெற்றது.

வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன், காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் ந.பென்ராசா, கோப்பாய் பிரதேச சபை உறுப்பினர் சறிகுமரன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஆயியோர் இப் போட்டியின் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

3 போட்டிகள் கொண்ட இத் தொடரில் இரண்டு போட்டிகளை வெற்றி கொண்ட யாழ்.ஊடக அமைய அணியினர் தொடரை கைப்பற்றினர்.

இப் போட்டியில் தொடர் ஆட்டநாயகனாக ந.சுநேந்திரனும், சிறந்த துடுப்பாட்ட வீராக நி.கவிந்தனும், சிறந்த பந்துவீச்சாளராக நீ.கஜனும் தெரிவு செய்யப்பட்டனர்.20

0/Post a Comment/Comments

Previous Post Next Post