வலிகாமம் வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து மேலும் ஒரு தொகுதி நிலம் விடுவிக்கப்படதுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து காணி விடுவிப்பு முயற்சியை அவர் துரிதப்படுத்தி இருக்கிறார்.
அடுத்த வரும் நாட்களில் முழு விபரமான வரைபடங்கள் மற்றும் ஆவணங்களோடு ஜனாதிபதியை சந்தித்து விளக்கம் அளித்து தமது திட்டத்துக்கு அமைச்சர் அனுமதி பெறுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன..
யாழ். குடாநாட்டில் படையினரின் பிடியில் தற்போது 4 ஆயிரம் ஏக்கர் வரையான நிலம் உள்ளது. இதில் வலிகாமம் வடக்கில் மட்டும் 3457 ஏக்கர் நிலம் படையினர்வசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment