ராஜபக்ச குடும்பத்தினர் மத்தியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக காண்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன சமூக ஊடகங்கள் மையஊடகங்களை பயன்படுத்தி திட்டமிட்ட வகையில் இந்த முயற்சிகள் இடம்பெறுகின்றன என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார்என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனக்கு நெருக்கமான சகாக்களுடான சந்திப்பின்போது இதனை தெரிவித்துள்ள ஜனாதிபதி சமூக ஊடகங்கள் மூலமே முக்கியமாக இந்த முயற்சிகள் இடம்பெறுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரும் நானும் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராவதை எதிர்ப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்,எதிர்கட்சியினருக்கு சாதகமான நிலையை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான தகவலை அவர்கள் பரப்ப முயல்கின்றனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும் மக்களிற்கு உண்மை தெரியும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி சிலர் எதனை தெரிவித்தாலும் மக்களிற்கு எல்லாம் தெரியும்,ராஜபக்ச சகோதாரர்கள் இணைந்தே முடிவெடுக்கின்றர் செயற்படுகின்றனர் என்பது மக்களிற்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.
பசில் நாடாளுமன்றம் செல்வதை நான் எப்படி எதிர்க்க முடியும் நாடாளுமன்ற உறுப்பினராகுமாறு நானே அவரை கேட்டேன் பிரதமரினதும் எனதும் சம்மதத்துடனேயே இவை இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment