முல்லை. மாணவன் மாயம்- கடத்தப்பட்டாரா? சந்தேகம் -தீவிர தேடுதல் முன்னெடுப்பு- - Yarl Voice முல்லை. மாணவன் மாயம்- கடத்தப்பட்டாரா? சந்தேகம் -தீவிர தேடுதல் முன்னெடுப்பு- - Yarl Voice

முல்லை. மாணவன் மாயம்- கடத்தப்பட்டாரா? சந்தேகம் -தீவிர தேடுதல் முன்னெடுப்பு-




முல்லைத்தீவு- துணுக்காய், உதயசூரியன் நகர் வசிக்கும் விஜயகுமார் விதுசன் என்ற மாணவன் காணாமல் போயுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் அவரது பெற்றோரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் குறித்த மாணவன், வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில்  நீராடுவதற்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

இவ்வாறு  சென்ற மாணவன், நீண்ட நேரமாக வீடு திரும்பாதமையினால், அவரது பெற்றோர்கள்,  கிணற்றிற்கு சென்று பார்த்தப்போது, அவர் எடுத்துச் சென்ற உடைகள் மாத்திரம் அங்கு கிடந்துள்ளது.

மேலும் அம்மாணவன் எடுத்துச் சென்ற சவர்க்காரம் மாங்குளம் துணுக்காய் வீதியில் அவரின் வீட்டுக்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் இருந்துள்ளது.

இதனால் குழப்பமடைந்த பெற்றோர் உடனடியாக பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பாக தெரியப்படுத்தினர்.

இந்நிலையில் மாணவனை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் அப்பிரதேச மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த மாணவனை கண்டவர்கள், 0770871475 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக அறியத்தருமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post